மூச்சு முட்டும் கதை...  மூன்று மில்லியன் ரசிகர்கள்! - ஆங்கில சீரிஸ் வரிசையில் அசத்தும் THE 100


க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@thehindutamil.co.in

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் முடிந்துவிட்ட சோகத்தில், அடுத்தடுத்த தொடர்களிடம் தஞ்சமடையத் தொடங்கியிருக்கிறார்கள் ஆங்கில சீரிஸ் ரசிகர்கள். பெரும்பாலானோரின் முதல் சாய்ஸ் ‘தி 100’. அமெரிக்காவின் சி.டபிள்யூ சேனலில் ஒளிபரப்பாகிவந்த இந்தத் தொடர், இன்றைக்கு அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற இணையதளங்கள் மூலம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களைக் கவரத் தொடங்கியிருக்கிறது. முதல் சீசன் ஒளிபரப்பானபோதே முப்பது லட்சம் ரசிகர்களைக் கொண்டிருந்த இந்தத் தொடர், ஆறாவது சீசன் வெளியாகியிருக்கும் நிலையில் மூன்று மில்லியன் ரசிகர்களின் ஃபேவரைட்டாகியிருக்கிறது.  

x