திரை விமர்சனம்: தேவி 2


காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

>> மொரிஷியஸ் தீவில் மனைவியுடன் வசிக்கும் நாயகனை, ஒரே நேரத்தில் இரு பேய்கள் பிடித்துக்கொள்கின்றன. ஷிஃப்ட் முறைப்படி அவை, நாயகன் உடலுக்குள் புகுந்து தங்களின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத் துடிப்பதும், பேய்களிடம் இருந்து நாயகன் மீள்வதுமே ‘தேவி 2' படத்தின் கதை.

>> கிருஷ்ணா, அலெக்ஸ், ரெங்காரெட்டி என மூன்று வெவ்வேறு விதமான பாத்திரங்களை உள்வாங்கி சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் பிரபுதேவா. அதிலும் பேய் பாத்திரங்களில் காதலிகளிடம் ஜொள்ளுவது, பொக்கே கொடுப்பது, தமன்னாவிடம் நேசம் காட்டுவது என பிரபுதேவாவின் பங்களிப்பு சிறப்பு.

x