பிட்லீ
‘பிசாசு’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரயாகாவை அதன் பிறகு தமிழ் சினிமாவில் யாருமே கண்டுகொள்ளவில்லை. இப்போது தனது கிளாமர் புகைப்படங்களைத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வாய்ப்புத் தேடி வருகிறார். அமலாபால், ஹன்சிகாகிட்டே எல்லாம் டிப்ஸ் கேளுங்களேம்மா!
இயக்குநர் செல்வராகவனை விவாகரத்து செய்த சோனியா அகர்வால், தற்போது சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், பெரிய அளவில் முன்னுக்கு வர முடியவில்லை. பொருளாதார ரீதியாகக் கஷ்டப்படுவதைப் பார்த்து மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்களாம் உறவினர்கள். மறுமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம் சோனியா. தீக்குள்ளே விரல் வைத்தேன், தனித்தீவில் கடை வைத்தேன்...