படங்கள் மூலம் அரசியல் பேசுவேன்!- பார்த்திபன் பளிச்


க.விக்னேஷ்வரன்

ரஜினியின் பாராட்டு, ஆமிர் கானின் வாழ்த்து என்று திரும்பிய திசையெல்லாம் பூங்கொத்துகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறது பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு - சைஸ் 7’. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இயக்கத்துக்குத் திரும்பியிருக்கும் இந்தப் புதுமைப் பித்தன், ஒரே கதாபாத் திரத்தை மட்டும் கொண்ட படமாக இதை உருவாக்கியிருக்கிறார். அதுபற்றி பேச அவரது அலுவலகம் சென்றிருந்தேன். பழங்கால தோற்றமுடைய பெட்டி, எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் நம்மையே நோக்கும் 3டி புத்தர், கீச்சொலியின் மூலம் கவனம் ஈர்க்கும் ‘ஆஃப்ரிக்கன் க்ரே’ கிளி ஜோடி என்று அறை முழுவதும் ரசனை சொட்டுகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இருந்தவர், களைத்து சிவந்த கண்களுடன் வந்தமர்கிறார்.

படத்தின் கதை என்ன?

ஒரு ரூம்ல நடக்குற விசாரணை. அதுதான் மொத்தப் படமும். சமூகத்து மேல ஒரு விளிம்பு நிலை மனிதனுக்கு இருக்குற கோபம், ஆற்றாமைய இரண்டரை மணி நேரத்துல விறுவிறுப்பா சொல்ல ட்ரை பண்ணியிருக்கேன். படம் முழுக்க நான் மட்டும்தான் ஸ்கிரீன்ல இருப்பேன். அந்த ரூம்ல வேறு சில கேரக்டர்ஸும் இருப்பாங்க, ஆனா, அவங்க குரல் மட்டும்தான் கேட்கும். அவங்களோட பார்வையிலதான் கதையே நகரும்.

x