கேம் ஆஃப் த்ரோன்ஸ்- முடிவுக்கு வந்த அரியணைப் போராட்டம்


க.விக்னேஷ்வரன்

ஒரு கதை, கோடிக்கணக்கான ரசிகர்கள், எட்டு வருடப் பயணம் என உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிய ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கடந்த வாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் எழுதிய ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ நாவல் தொகுப்பைத் தழுவி எடுக்கப்பட்ட இத் தொடரின் முதல் சீசன் 2011-ல் எச்பிஓ சேனலில் ஒளிபரப்பானது. நாவல் தொகுப்பின் முதல் பகுதியின் தலைப்பையே தொடருக்கான தலைப்பாக வைத்துவிட்டனர். வருடத்துக்கு ஒரு சீசன் என்று இதுவரை 8 சீசன்கள். ஒவ்வொரு சீசனிலும் ஆறு முதல் பத்து எபிஸோடுகள் என்று உலகத்தையே கட்டுக்குள் வைத்திருந்த தொடர் முடிவடைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏழு அரசாங்கம் ஓரே ராஜா

x