விஜய் ஆண்டனி கொடுத்த முத்தங்கள்- இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்


க.விக்னேஷ்வரன்

பகல் முழுவதும் வறுத்தெடுத்த சூரியன் தலைமறைவாக ஆரம்பித்த மாலை வேளையில் ‘கொலைகாரன்’ பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸைப் பார்க்கலாம் என்று கிளம்பினேன். பேட்டி என்றதுமே "சார்... சென்சார் வேலையில் இருக்கேன்... சரியா ரெண்டு மணி நேரம் கழிச்சு நுங்கம்பாக்கம் ஆபீஸ் வந்துடுங்களேன். ஃப்ரீயா பேசலாம்” என்றார் ஆண்ட்ரூ லூயிஸ்.

அவர் சொன்ன நேரத்துக்கு நுங்கம்பாக்கத்தில் இருந்தேன். “அடடா... சென்சார் முடிச்ச கையோட ஏவிஎம் ஸ்டுடியோ வந்துட்டேனே சார்... இங்கே வர முடியுமா?” என்றார். முன் ஜென்மத்தில் அவரை ரொம்பவே கஷ்டப்படுத்தியிருப்பேன் போல... போஸ்ட் புரொடக்‌ஷன் நேரத்தில் சினிமாவில் இதெல்லாம் சகஜம்தானே என எனக்கு நானே மனசை தேற்றிக்கொண்டு ஏவிஎம் ஸ்டுடியோ சென்றேன்.

மூங்கில் மரங்களால் சூழப்பட்ட ஏவிஎம் கேன்டீனில் உட்கார்ந்து சுடச்சுட டீ அருந்திக் கொண்டிருந்தார் ஆண்ட்ரூ. சென்னையிலதாம்பா கொளுத்துற வெயில்லயும் டீ அடிக்கிறாங்க என்ற என் எண்ண அலைகளைப் படித்திருப்பார் போல. அறிமுகப்படுத்திக்கொண்டு உட்கார்ந்ததும், எனக்கும் அதே மாதிரி கொதிக்கிற டீ வந்தது.

x