மான்ஸ்டர் - திரைவிமர்சனம்


சொந்த வீடு வாங்கி கல்யாணக் கனவுடன் இருக்கும் வள்ளலார் பக்தன் நாயகன். அந்த வீட்டுக்குள் இருக்கும் எலியிடம் சிக்கி, அவனது வாழ்க்கையில் ஏற்படுகிற விபரீதங்கள்தான் ‘மான்ஸ்டர்’.

மின்வாரியத்தில் ஊழியராகப் பணிபுரியும் எஸ்.ஜே.சூர்யாவுக்குத் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. சொந்த வீடு வாங்கினால் திருமணம் நடக்கும் என்று நம்பி சொந்த வீடு வாங்குகிறார். அந்த வீட்டில் இருக்கும் எலி செய்கிற சேட்டைகளால் நிம்மதி இழக்கும் அவர், அந்த எலியை என்ன செய்கிறார், திருமணம் நடந்ததா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

கல்யாணம் ஆகாத வெறுமை, பெண் துணை இல்லாத தனிமை, எலியின் சேஷ்டைகளால் தூக்கம் தொலைத்த இரவுகள், அப்பழுக்கற்ற வெள்ளந்தி மனம், போதாமை என்று எல்லா உணர்வுகளையும் மிகச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

பிரியா பவானி சங்கர் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார். புன்னகையில் மலர்ந்து கண்களால் ஜாலம் காட்டி உரையாடல்களில் நேசம் கொட்டி தன் இருப்பைப் பதிவு செய்யும் விதம் அழகு. கருணாகரன் அலட்டல் இல்லாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.

x