சினிமா பிட்ஸ்


தமன்னா, பிரபுதேவா இணைந்து நடிக்கும் இந்திப் படம் ‘காமோஷி'. இதில் சைக்கோ கொலைகாரனாக பிரபுதேவாவும் காதுகேளாத, வாய் பேச முடியாத ஓவியராக தமன்னாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தமன்னாவின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என்கிறார்கள்.

கதையில் கொஞ்சம் ‘மெர்க்குரி' வாசம் அடிக்குதே?

அஜித்துடன் ‘நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார் ஷ்ரத்தா நாத். ‘இரும்புத்திரை-2'ல் விஷாலுக்கு ஜோடியும் இவர் தான். முதல் பாகத்தில் நடித்த சமந்தா இரண்டாம் பாகத்தில் நடிக்காதது அவரது ரசிகர்களை சோகத்தில் தள்ளியிருக்கிறது.

ஆக, அவங்களுக்கே படம் பிடிக்கல போல...

x