எஸ்.ஜே.சூர்யா இமேஜ் இப்போ மாறிடுச்சு!- ‘மான்ஸ்டர்’ இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்


நா.இரமேஷ்குமார்

``சார்... படத்தோட பப்ளிசிட்டி வேலைகள்ல இருக்கேன். பத்து நிமிஷத்துல முடிச்சிடலாம் இல்லையா?" என்று தாடியைத் தடவியபடியே வந்தமர்கிறார் ‘மான்ஸ்டர்’ படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலமாக நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சியவர்.

‘மான்ஸ்டர்’ படத்தின் ஆரம்பப் புள்ளி எது?

என்னுடைய ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதை விட நிச்சயமா வித்தியாசமா இருக்கணும்னு யோசிச்சிருந்தேன். ஆரம்பத்துல தயாரிப்பாளரிடம் வேற ஒரு கதையைத் தான் சொன்னேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், நாம் கடந்து வந்த சம்பவங்கள்னு என்னை இந்தக் கதை இன்னும் உள்ளே இழுக்க ஆரம்பிச்சு உற்சாகப்படுத்துச்சு. அப்படி தான் ‘மான்ஸ்டர்’ உருவாச்சு.

x