சசிகலாவாக நடிக்கவும் நான் ரெடி!- மஞ்சிமா மோகன்


நா.இரமேஷ்குமார்

துறுதுறு மஞ்சிமா மோகனை சாலிகிராமம் பிரசாத் ப்ரிவியூ தியேட்டரில் சந்தித்தேன். “டல் மேக்கப்பில் இருக்கிறேன்... அப்புறமாக படம் எடுத்துக் கொள்ளலாம்... அங்கே லைட்டிங் நல்லாயில்லை...” என்று புகைப்படக்காரருக்கு ஏகத்துக்கும் போக்கு காட்டி, ஒவ்வொரு போஸுக்கும் அத்தனை கவனம் செலுத்தியபடியே பேச ஆரம்பித்தார் மஞ்சிமா.

‘தேவராட்டம்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தீங்க. ஆனா, படத்துல உங்களுடைய கேரக்டர் பெருசா இல்லையே?

என்னிடம் இயக்குநர்கள், படத்திற்கான கதையைச் சொல்லும்போது சில காட்சிகள் பிடித்திருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்வேன்.

x