பையனுக்காக பிரேக் எடுத்திருந்தேன்!- நடிகை ஊர்வசி


உ.சந்தானலெட்சுமி

“எங்க சேனல்ல ஊர்வசி மேடம் சீரியல் பண்றாங்க” என்று கலர்ஸ் டிவி பி.ஆர்.ஓ. அதிதியின் செல்போன் அலறியது. ஷூட்டிங் லொகேஷன் கேட்டுக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தேன்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமான அபாய திருப்பங்களைக் கடந்து திருவேற்காடு ஏரியாவுக்குள் நுழைந்தேன். ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் விஸ்தாரமான பங்களாவைக் கட்டக் கடைசியில் கண்டுபிடித்தபோது மணி பிற்பகல் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

தேசிய விருது நடிகை, பாடகி, கதையாசிரியர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் எனத் திரையுலகின் தவிர்க்கவே முடியாத பன்முகத் திறமை ஊர்வசிக்கு. எந்த அலட்டலும் இல்லாமல் கட்டம் போட்ட சந்தன கலர் புடவையில் யூனிட் ஆட்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தார். கைகளை ஆட்டி ஊர்வசி பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் காதில் தொங்கும் ஜிமிக்கி காற்றில் தாள லயம் போட்டுக்கொண்டிருந்தது.

x