விஜய் அஜித்கூட நடிக்க மாட்டேன்னா சொன்னேன்!- வேதிகா


நா.இரமேஷ்குமார்

நடிக்கவந்து 14 வருஷங்களைக் கடந்தாச்சு... ஆனாலும் அழகில் அப்படியே தானிருக்கிறார் வேதிகா. வசூலில் பேய் பாய்ச்சலைக் காட்டிய ‘முனி’ படத்தில் லாரன்ஸுக்கு ஜோடி போட்டவர், இப்போது ‘காஞ்சனா 3’ படத்திலும் லாரன்ஸ் ஜோடி. மழை சென்னைப் பக்கம் எட்டிப் பார்க்காதா என வெயிலுக்கு பயந்து எல்லோரும் ‘ரெட் அலர்ட்’க்கு பவ்யம் காட்டிக் கொண்டிருந்த சமயத்தில், மும்பையிலிருந்து வந்திருந்தவேதிகாவைச் சந்தித்தேன்.

‘பரதேசி’ படத்துக்கப்புறமா பெரிய ரவுண்ட் வருவீங்கன்னு எதிர்பார்த்தா... ‘காஞ்சனா3’ல்  கிளாமர் ஆட்டம் போட்டிருக்கீங்களே?

‘முனி’ ரிலீஸாகி ஒன்பது வருஷமாச்சு. பேய் கதை சீசனை தொடங்கி வெச்ச படம் அதுதான். அதுக்குப் பிறகு எத்தனையோ பேய் படங்கள் வந்தாலும், முனிக்கு  மட்டும் தனி மவுசு இருந்தது. தமிழ் சினிமாவில் புது டிரெண்ட் உருவாகக் காரணமா இருந்த படம் அது. தவிர, லாரன்ஸ் சார் ஞாபகம் வெச்சு கூப்பிட்டார். 80 நாட்கள் ‘காஞ்சனா3’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன். இவ்வளவு நாள் வேற எந்தப் படத்துக்கும் நான் கால்ஷீட் கொடுத்தது கிடையாது. லாரன்ஸ் சாரின் அன்புக்காக கமிட்டான படம் ‘காஞ்சனா3’.

x