ஜெயலலிதாவாக நிச்சயம் நடிக்க முடியாது!- இனியா


நா.இரமேஷ்குமார்

தமிழ் சினிமா கதாநாயகிகளில் த்ரிஷா, நயன்தாரா, அமலாபால், ஆண்ட்ரியா, அஞ்சலி, நமீதா, லட்சுமிராய் என்று நிறைய பேர் சிங்கிள் ஹீரோயினாகப் படங்களில் தனி ஆவர்த்தனம் செய்யத் துவங்கிவிட்டார்கள். இப்போது அடுத்த சீசன் களை கட்டியிருக்கிறது. ஹீரோக்களைப் போலவே ஹீரோயின்களும் போலீஸ் கெட்டப்பில் நடிக்க போட்டி போடுகிறார்கள். அப்படித்தான் தமிழில் சரிவர வாய்ப்புகள் அமையாமல் மலையாளப் படங்களில் கவனம் செலுத்திவந்த இனியா ‘காபி’ படம் மூலமாக ரீ-என்ட்ரி ஆகிறார். அவரை நுங்கம்பாக்கம் காபி ஷாப்பில் சந்தித்தேன்.

‘காபி’ படம் உங்களோட ரீ-என்ட்ரிக்கு சரியா இருக்குமா?

சாய் கிருஷ்ணான்னு அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கார். ‘காபி’ படத்தில், போலீஸ் அதிகாரி சத்யபாமாவாக நடிச்சிருக்கேன். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து ஏழ்மையான நிலையில் இருக்கிற குடும்பத்துப் பெண். வாழ்க்கையோட அத்தனை சவால்

x