நா.இரமேஷ்குமார்
சமீப காலமாய் சர்வதேச அளவில் தமிழ் சினிமாக்கள் தனி கவனம் பெற்று வருகின்றன. அப்படி சர்வதேச அடையாளங்களையும், விருதுகளையும் பெற்று வருவதில் இந்த முறை இயக்குநர் தரணி ராசேந்திரன் களமிறங்கி இருக்கிறார்.
நெடு நெடுவென உயரம், ஒல்லிய தேகம். கண்களில் இன்னமும் மிச்சமிருக்கிற சோர்வும், அயர்ச்சியுமாய் முப்பது வயதுக்குள் தானிருக்கும் என்னைச் சந்திக்க அலுவலகம் தேடி வந்த இயக்குநர் தரணி ராசேந்திரனுக்கு.
இவர் வயது பிள்ளைகள் கோடம்பாக்கத்தின் கலர் கனவுகளில் மூழ்கி, தங்களது ஆதர்ச தலைவர்களைத் தேடிக்கொண்டிருக்கையில் தரணியின் எண்ணக் கனவுகள் வேறு விதமான வடிவங்களில் இருந்தது ஆச்சரியப்பட வைத்தது.