வாட்ச்மேன் - திரை விமர்சனம்


30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன், திருட நினைத்து அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினால், அதுவே ‘வாட்ச்மேன்'.

வட்டிக்குக் கடன் வாங்கி சுயதொழில் செய்யும் நாயகனுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. விடிந்தால் நிச்சயதார்த்தம் என்னும் சூழலில் வட்டிக்காரர் துரத்த, வேறு வழியே தெரியாமல் ஒரு வீட்டுக்குள் திருடப் போகும் நாயகன், அங்கு வினோத சிக்கலுக்குள் சிக்கிக்கொள்கிறார். அதில் இருந்து நாயகன் மீள்வதும், அதன் பின்னணிகளைச் சொல்வதுமே படத்தின் திரைக்கதை.

ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதைதான் என்றாலும் அதை ஈர்ப்புடன் கொண்டு சென்ற விதத்திலும், நாய் சம்பந்தப்பட்ட காட்சிகளை நேர்த்தியாய் காட்டிய விதத்திலும் இயக்குநர் விஜய் கவனிக்க வைக்கிறார்.

பணத்தேவைக்காக ஓடுவது, நாயிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது, வட்டிக்குக் கொடுத்தவர், காதலியின் போன்கால்களை டீல் செய்வது, நாயகனுக்

x