சினிமா பிட்ஸ்


‘தரமணி’ படத்திற்காக ஆங்கிலத்தில் பாட்டெழுதி ஆல்பம் ரிலீஸ் செய்த ஆண்ட்ரியா, தனக்கு மிகவும்  பிடித்த இசையமைப்பாளர் அனிருத் ஆலோசனையின் பேரில் இப்போது கர்நாடக இசையைக் கற்று வருகிறார். சீக்கிரமே முழு படத்துக்கும் இசையமைக்கும் ஆர்வம் இருக்கிறதாம்.

 அனிருத்துக்கு சான்ஸ் உண்டுங்களா..?

லைகா தயாரிப்பான ‘தர்பார்’ படத்துக்காக ரஜினி, முருகதாஸ் டீம் மும்பைக்குக் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். படத்தின் ஹீரோயின் நயன்தாரா மும்பை செல்லும் அதே விமானத்தில் டிக்கெட், அதே ஹோட்டலில் பக்கத்து ரூம் என லிஸ்ட் கொடுத்திருக்கிறாராம் விக்னேஷ் சிவன். கேட்டால், லைகா நிறுவனத்தின் இன்னொரு படத்தின் கதை விவாதத்துக்காகச் செல்கிறேன் என்கிறார் விக்னேஷ்.

நல்ல கதையா இருக்கே?

x