நிஜத்துல நான் ரொம்ப அடாவடிப் பொண்ணு!- டாம்பாய் ரோலில் ஆயிஷா...


உ.சந்தானலெட்சுமி

ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ‘சத்யா’ சீரியலின் படப்பிடிப்பு வளசரவாக்கத்தில் நடக்கிறது என்றார்கள். காமதேனுவுக்கு ஏதாவது செய்தி  சிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பில் அங்கே ஒரு விசிட் கொடுத்தேன். மதியம் மூன்று மணி வெய்யில் மண்டையைப் பிளக்க நடந்து கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து, “தள்ளு...  தள்ளு” ஒரு பெண் குரல்! திரும்பிப் பார்த்தால், ஆண் கெட்டப்பில் பைக்கில் அசால்ட்டு பண்ணிக் கொண்டிருந்தார் சீரியலின் நாயகி ஆயிஷா.

பொன்மகள் வந்தாள், மாயா சீரியல்களில் பாந்தமான பயந்த பெண்ணாக பார்த்த ஆயிஷாவா டாம்பாய் ரோல் பண்றாங்க என்று   நினைத்துக்கொண்டிருக்கையில்... அவரே வந்து என்னிடம் சிக்கினார்.

“அப்டியே, டாம்பாய் மாதிரியே இருக்கீங்க?” என்று சொன்னதுதான் தாமதம், தடதடவெனக் கொட்ட ஆரம்பித்தார். “நிஜத்துல நான் ரொம்ப அடாவடிப் பொண்ணுதான். இந்த சத்யா ரோல் ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொல்றதைவிட நான் நானா இருக்கேன்னு சொல்லலாம். மத்த சீரியல்ல வேணா ரொம்ப பயந்த பொண்ணா அழுதுகிட்டு நடிச்சிருப்பேன். அந்த மாதிரி ரோல் எனக்கு சூட்டாகவும் இல்லைங்கிறதை இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா, நான் எப்பவும் ரொம்ப ஜாலியா, போல்டா இருக்கிற பொண்ணு. அப்டியே, என்னோட கேரக்டரைப் பிரதிபலிக்கிற மாதிரியான ரோல்தான் சத்யா கேரக்டர். இதுல வித்தியாசமான பையன் கெட்டப்ல இருக்கேன்.”

x