நட்பே துணை- திரை விமர்சனம்


காரைக்காலில் உள்ள ஹாக்கி மைதானத்தில், உலகின் பல நாடுகளும் அனுமதி மறுத்த மருந்து பேக்டரியைக் கட்ட முயல்கிறது ஒரு கும்பல். விளையாட்டுத்துறை அமைச்சரைக் கையில் வைத்துக்கொண்டு இவர்கள் மைதானத்தைக் கைப்பற்ற முயல, மைதானத்தில் ஹாக்கி ஆடும் நண்பர்கள் சேர்ந்து அதைத் தடுத்து நிறுத்தி ஜெயிப்பதே ‘நட்பே துணை’யின் கதை.

முதல் பாதி, சுவாரசியமோ புதுமையோ இல்லாத காட்சிகளுடன் நகர்கிறது. இடைவேளையில் வரும் திருப்பம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் சலிப்பூட்டினாலும் அது முடிந்த பிறகு படம் சூடுபிடிக்கிறது.

“ரத்தத்தின் ரத்தங்களான அன்பு உடன்பிறப்புகளே” என அரசியல்வாதியாக என்ட்ரியாகும் கரு.பழனியப்பன் அந்த நெடியைக் கடைசி வரை தூக்கி சுமக்கிறார். “அவுங்க கம்பெனி நடத்துறாங்க. நாம

கட்சி நடத்துறோம். ரெண்டு பேருக்குமே காசு வேணுமே” என்பது தொடங்கி படம் நெடுகிலும் வசனத்தால் கவனிக்க வைக்கிறார்.

x