மிஸ் யூ மகேந்திரன் சார்..!- சுஹாசினியின் நினைவலைகள்...


நா.இரமேஷ்குமார்

இயக்குநர் மகேந்திரன் யதார்த்த நடிகைகள் பலரை சினிமாவில் முத்திரை பதிக்க வைத்தவர். அப்படியான அவரது அறிமுகம்தான் நடிகை சுஹாசினி. மகேந்திரன் மறைவு கேட்டு அவரது இல்லத்துக்கு ஓடோடி வந்து கண்கலங்கி நின்ற சுஹாசினி, மகேந்திரன் குறித்த நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

“என்னுடைய வழிகாட்டி... குரு... இன்னும் எப்படி வேணுமானாலும் மகேந்திரன் சாரைச் சொல்லலாம். எங்க அப்பா சாருஹாசனைப் பிரசவம் பார்த்தது, மகேந்திரன் சாரோட அம்மா மனோன்மணிதான். மகேந்திரன் சாரோட அப்பா டீச்சர். செல்லையா மாஸ்டர்.

அப்பாவுக்கும், மகேந்திரன் சாருக்கும் இடையே இருக்கிற பந்தம், அண்ணன் தம்பி உறவைப் போன்றது. அப்பாவை, ‘சாரு அண்ணா...’ன்னு அவர் நெகிழ்ந்து கூப்பிடும் அந்த அழகு இன்னும் என் காதில் ஒலிக்கிறது. சினிமாவில் என்னை மட்டுமல்லாமல், அப்பாவை அறிமுகப்படுத்தியதும் அவர்தான்.

x