சினிமா பிட்ஸ்


லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார் ஸ்ருதிஹாஸன். எப்போ கல்யாணம் என்று விசாரிப்பவர்களிடம், “இப்போதைக்கு அந்த ஆசையே கிடையாது. சரியான நபர் கிடைத்து, அவரைக் காதலிப்பது அருமையான அனுபவம். இன்னும் நான்கைந்து வருஷங்களுக்காவது காதலிச்சுட்டு அப்புறமா கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்” என்று தெறிக்க விடுகிறாராம்.

இப்ப அதுவா முக்கியம், பிரச்சாரத்துக்கு வருவீங்களா மேம்?!

ஜெயலலிதாவின் பயோபிக் படத்தை தமிழில் ‘தலைவி’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரிலும் இருமொழிப் படமாக இயக்குகிறார் விஜய். ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக நடிகை கங்கனா ரனாவத்துக்கு வலுவான சம்பளம் தர தயாரிப்புத் தரப்பும் சம்மதித்திருக்கிறதாம்.

அதுல ‘கறுப்பு’ எவ்வளவு?

x