காதல் கதை பேசும் காதல் கதை: நீயா - 2 இயக்குநர் எல்.சுரேஷ்


நா.இரமேஷ்குமார்

நயன்தாரா ரூபத்தில், சினிமா, அரசியல் என்று எல்லா ஏரியாக்களிலும் ராதா ரவிக்கு கண்டனங்கள் விழுந்து கொண்டிருந்தநேரத்தில், ‘நீயா 2’வுக்காக கேத்ரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி என்று மூன்று ஹீரோயின்களுடன் சாலிகிராமம் பிரசாத் எடிட் ஸ்டுடியோவில் முழு ஸ்கிரீனையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார் ஜெய். அங்கே எடிட்டிங்கில் கரெக்‌ஷன் சொல்லிக் கொண்டிருந்த இயக்குநர் எல்.சுரேஷை காமதேனு இதழுக்காகச் சந்தித்தேன்.

தமிழ் சினிமாவின் சீக்வெல் சீசனுக்காக ‘நீயா-2’வா? இல்ல... நீயாவோட தொடர்ச்சியா?

நிச்சயமா இந்தப் படம் நீயாவோட தொடர்ச்சி எல்லாம் கிடையாது. நீயா படத்துக்கும் இந்தப்படத்துக்கும் இருக்கிற ஒற்றுமைகள் என்னன்னா,ரெண்டுமே பாம்பு படம். தவிர, ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாட்டை இந்தப் படத்துலரீ-மிக்ஸ் பண்ணி பயன்படுத்தியிருக்கோம்.

x