நா.இரமேஷ்குமார்
“அரவிந்த்சாமி, ரெஜினா, பேபி மோனிகா இந்த மூணு பேரை வெச்சு செல்லுலாய்டுல வரைஞ்சிருக்கிற ரங்கோலிதான் சார் ‘கள்ளபார்ட்’. இந்தப் படம் அரவிந்த்சாமியை வேற ஒரு லெவலில் நமக்கு காட்டும்” என்று ரசனை மிளிர ஆரம்பிக்கிறார் ‘கள்ளபார்ட்’ இயக்குநர் ராஜபாண்டி.
நியூஸ் சேனல்களில், தேமுதிக நிர்வாகிகளை துரைமுருகன் வெச்சு செய்து கொண்டிருந்த நேரத்தில் தி.நகர் பனகல்பார்க் அருகே இயக்குநரைச் சந்தித்தேன்.
“சினிமா கனவுல மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தேன் சார். யோசிச்சுப் பார்த்தா வாழ்க்கை, நாம எதிர்பார்க்காத திருப்பங்களை எல்லாம் நமக்காக உருவாக்கி வெச்சிருக்கு. திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன் கோர்ஸ் முடிச்சுட்டு மணிரத்னம் சார்கிட்ட ‘திருடா திருடா’ படத்துல உதவியாளரா இருந்தேன். சின்ன மனஸ்தாபம்; பாதியில வெளியே வந்துட்டேன்.