மஹா
கிரிக்கெட்டுக்காக அடிக்கடி உலகம் சுற்றும் கணவருக்காகத் தானும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பயணப் பட்சியாக பறந்து கொண்டிருக்கிறார் தொகுப்பாளினி தியா மேனன்!
சன் டிவி-யில் ‘வணக்கம் தமிழா’, மலையாளத்தில் சூர்யா மியூசிக் சேனல் எனத் தொகுப்பாளினியாக குரல் தடம் பதிக்கவும் தவறாத மேனன், விளம்பர ஷூட் ஒன்றுக்காக சென்னை வந்திருக்கும் விஷயம் அறிந்து அவரைச் சந்தித்துப் பேசினேன்.
கண்டம் விட்டு கண்டம் தாவும் பயணம், நிகழ்ச்சித் தொகுப்பாளினி, குடும்பத்தலைவி - இப்படி எல்லாப் பொறுப்புகளையும் சமர்த்தாக சுமக்கப் பழகிக்கொண்டது எப்படி?