இந்திய சினிமாவுக்கே இது புதுசு!- ‘பக்ரீத்’ இயக்குநர் ஜெகதீசன் சுபு


நா.இரமேஷ்குமார்

பரட்டைத்தலை, கரடுமுரடான தாடி, வெள்ளந்தி சிரிப்பு என ஒட்டகத்தை வாஞ்சையாக கட்டியணைத்தபடி ஆளே மாறியிருந்தார் விக்ராந்த். அவர் கூடவே, முகமெல்லாம் இருக்கிற கொஞ்ச கலரையும் கறுப்பாக்கி, டல் மேக்கப்பில் கிராமத்துப் பெண்ணாக நடிகை வசுந்தரா. ‘பக்ரீத்’ படத்துக்காக இயங்கிக் கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் கம் இயக்குநர் ஜெகதீசன் சுபுவைச் சந்தித்தேன்.

‘பக்ரீத்’ படத்தின் கதை என்ன?

நம்ம கிராமத்துல பார்த்தீங்கன்னா ஒரு செடியோட கிளையைக்கூட அநாவசியமா ஒடிக்க மாட்டாங்க. நான் அடிப்படையில் கிராமத்துலருந்து வந்ததுனால அந்த உணர்வை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. ‘புல் தரை மீது நடக்காதீர்கள்’, ‘பூக்களைப் பறிக்காதீங்க’ன்னு பலகையில் எழுதி வெச்சு நகரத்துப் பூங்காக்களில் பாதுகாக்கிற நிலைமைதான் இங்கே இருக்கு. ஆனா, கிராமத்துல அடுத்தவங்க வயல்னாகூட வரப்புலதான் நடந்து போவாங்க. செடி, கொடிகளை எல்லாம் ஒரு உயிரா பார்க்கிற, உணர்கிற மனசு விவசாயிக்கு உண்டு.

x