சினி பிட்ஸ்


பிட்லீ

அசினுக்குப் பிறகு பிரியாமணி, எமி ஜாக்ஸன், ராய் லட்சுமி, தமன்னா, காஜல் அகர்வால் என்று அரை டஜன் ஹீரோயின்கள் இந்தியில் நடிக்கப் போனார்கள். இவர்களின் டாப்ஸி மட்டும் இதுவரை தாக்குப் பிடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் இந்தி சினிமாவில் நடிக்க இருக்கிறார்.

பிரியாமணியைத் தவிர மற்றவர்கள் இன்னும் ‘கலைமாமணி’ வாங்கவில்லை என்பது ஆறுதல்!

கஞ்சா, ஆபாசம் என்று சர்ச்சை கிளப்பியும் ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. கண்கலங்கிய தயாரிப்பாளரைத் தேற்ற சிம்புவிடம் பேசி, உடன் நடிக்கச் சம்மதிக்க வைத்திருக்கிறார் ஹன்சிகா. ஏற்கெனவே பழகிய பழைய ஜோடி லண்டன் ஷூட்டிங்கில் மறுபடி சிறகடிக்கப் போகிறது.

x