கண்களால் கவிதை பேசும் சிருஷ்டி - ‘சத்ரு’ இயக்குநர் நவீன் நஞ்சுண்டன்


நா.இரமேஷ்குமார்

“எல்லா நடிகர்களுக்கும் அவங்களோட திரை வாழ்க்கையில மறக்க முடியாத, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமா ஒரு போலீஸ் படம் நிச்சயம் இருக்கும். அப்படி, நாயகன் கதிரோட சினிமா கிராஃபை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் படமா ‘சத்ரு’ இருக்கும்” என்று நம்பிக்கையாய் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன்.

“கிருஷ்ணகிரி பக்கத்துல பர்கூர் தான் சார் சொந்த ஊர். ஊர்ல அப்பா விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கார். சாதாரண நடுத்தர குடும்பம் தான். எப்படி சினிமா ஆசை வந்துச்சுன்னு சொல்லத் தெரியலை. இங்கே சென்னை சத்யபாமாவுல எம்பிஏ முடிச்சேன். கல்லூரி நாட்கள்ல நிறைய கலை நிகழ்ச்சிகள் பண்ணுவோம். ரிலீஸாகிற படங்களை எல்லாம் நண்பர்களுக்குள்ள விமர்சனம் பண்ணுவோம். ஒவ்வொரு காட்சியா விவரிச்சுப் பேசும் போது நண்பர்கள் கொடுத்த உற்சாகம் சினிமா ஆசையா வளர்ந்துச்சு.

என்னோட ரூம்ல, விஸ்காம் மாணவர்களும் தங்கியிருந்தாங்க. அவங்களுக்கான புரொஜெக்ட் பண்ணிக் கொடுத்தப்பதான் என்னால சினிமாவுல சாதிக்க முடியும்னு முழுசா நம்பிக்கை வந்தது. ஆனா, சினிமா அத்தனை சுலபமா வசப்படலை. ரெண்டு மூணு வருஷங்கள் உதவி இயக்குநருக்கு வாய்ப்புத் தேடியே போச்சு. என்னை செதுக்கி, என் சினிமா கனவுகளை ஒரு நேர்கோட்ல பயணிக்க வெச்சது இயக்குநர் ராதா மோகன் சாரும், டூயட் மூவிஸும்தான். என்னோட விசிட்டிங் கார்ட் பிரகாஷ்ராஜ் சாரோட டூயட் மூவிஸ்தான்.

x