தடம் - திரை விமர்சனம்


ஓர் உரு இரட்டையர்களில் கொலையாளி யார் என்பதை நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு போலீஸ் கண்டுபிடிப்பதே ‘தடம்' படத்தின் கதை.

சென்னையில் ஆகாஷ் என்ற இளைஞர் மர்மமான முறையில்   படுகொலை  செய்யப்

படுகிறார். செல்ஃபி படம் ஒன்று தடயமாகக் கிடைக்க அதை வைத்து எழில் என்ற பொறியாளர் (அருண் விஜய் 1), சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபடும் கவின் (அருண் விஜய் 2) ஆகியோரை ஒரே காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே உருவ ஒற்றுமையுள்ள இருவரில், யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது போலீஸ். உண்மையில் நடந்தது என்ன, கொலையாளி யார், கொலை செய்யப்பட்டவர் யார் போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகப் பதில் சொல்கிறது திரைக்கதை.

சவாலான ஒரு கொலை வழக்கை போலீஸ் எப்படி புலனாய்வு செய்கிறது என்பதைப் பதிவு செய்ததன் மூலம் இயக்குநர் மகிழ் திருமேனியின் புத்திசாலித்தனம் படம் முழுக்க திரைக்கதை நுட்பங்களால், டீட்டெயில்களால் நிரம்பியுள்ளது.

x