திருமணம் சில திருத்தங்களுடன் - திரை விமர்சனம்


வருமானவரித் துறையில் இளநிலை அதிகாரியாக இருக்கும் சேரனின் தங்கை காவ்யா சுரேஷும், ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த சுகன்யாவின் தம்பி உமாபதியும் காதலிக்கிறார்கள். வீட்டுப் பெரியவர்களிடம் தங்கள் காதலைச் சொல்லி சம்மதத்துடன் திருமணக் கனவில் பயணிக்கிறது காதல் ஜோடி. திருமண நிகழ்ச்சிக்கான மண்டபம், அலங்காரம், அழைப்பிதழ், சாப்பாடு, உடைகள் என்று அடுத்தடுத்து இரு குடும்பத்துக்கும் இடையில் வரும் கருத்து வேறுபாட்டால் ஒரு கட்டத்தில் திருமணமே நிறுத்தப்படுகிறது. இறுதியில் இவர்களது திருமணம் எப்படி நடந்தது என்பதுதான் மீதிக் கதை.

ஒவ்வொன்றுக்கும் கணக்குப் பார்த்து வாழ்கிற சேரனின் நடுத்தர குடும்பத்துக்கும், தாராளமாக செலவு செய்யும் சுகன்யாவின் குடும்பத்துக்குமான வாழ்க்கை முறை வித்தியாசத்தை சில,பல காட்சிகளில் புரிய வைக்கும் இடங்களில் இயக்குநராக மிளிர்கிறார் சேரன்.

நடிப்பிலும் சேரனுக்கு பாஸ் மார்க் தான். தம்பிக்காக வாழும் அக்காவாக சுகன்யா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட அனைவருமே அவர்களது பங்களிப்பை திருப்திகரமாக செய்திருக்கின்றனர்.

படத்தில் உமாபதிக்கு காதலிப்பதைத் தவிர வேறு அதிக வேலையில்லை.

x