இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்- ‘டு லெட்’ நாயகி ஷீலா


உ.சந்தானலெட்சுமி

பரத நாட்டியக் கலைஞர், தியேட்டர் ஆர்டிஸ்ட், நடிகை எனப் பல முகங்கள் இருந்தாலும் துறுதுறுவென இருக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணாகவே பரிச்சயமாகிறார் ஷீலா. சர்வதேச விருதுகள், தேசிய விருது எனப் பல விருதுகளைக் குவித்திருக்கும், ‘டு லெட்’ படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த மகிழ்ச்சியின் திளைப்பில் இருந்த ஷீலாவை பேட்டிக்காக தொடர்பு கொண்டேன்.  ‘‘இப்ப ஒரு இன்டர்வியூல இருக்கேன். நீங்க ஒண்ணு செய்யுங்களேன்... வளசரவாக்கத்துலதான் என்னோட வீடு இருக்கு. சாயந்தரம் 4 மணிக்கு மேல அங்க வந்துருங்களேன். பேசலாம்” என்றார். சொன்னபடி சொன்ன நேரத்தில் அங்கே இருந்தேன். எனக்கு முன்பே ஷீலா ரெடி. இதமான தேநீரை உறிஞ்சியபடியே எங்களின் பேட்டி ஆரம்பமாகியது.

டு லெட் பட வாய்ப்பு அமைந்தது பற்றி..?

தியேட்டர் ஆர்டிஸ்டாக நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு சில குறும்படங்களிலும் நடிச்சிருக்கேன். ஒரு பத்திரிகையில் வந்த என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ரொம்ப யதார்த்தமான முகமாக இருக்கணும்னு இயக்குநர் செழியன் இந்தப் படத்திற்கு என்னைத் தேர்வு செஞ்சாங்க. கிட்டத்தட்ட ஒரு மாதமா நடிப்பு சொல்லிக் கொடுத்துட்டுதான், படப்பிடிப்பை ஆரம்பிச்சாங்க. மொத்தமே 24 நாள்ல படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு.

x