சின்னத்திரையிலும் அரசியல் இருக்கு!- தொகுப்பாளினி சசிகலாவின் ஆதங்கம்


மஹா

‘‘சீனா, ஜப்பானைப் போல மலேசியாவிலும் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் படை இருக்கு. அங்க, நம்ம பூர்ணிமா, ராதா, அம்பிகா, மேனகா, சிம்ரன் மாதிரி சீனியர் நடிகைகளோடு சேர்ந்து ரஜினியைக் கொண்டாடுற மாதிரி ஒரு சேனல் நிகழ்ச்சி கிடைச்சா எப்படி இருக்கும். அதான் மலேசியா சேனல் பக்கமும் கவனத்தை திருப்பினேன்’’ என்று புன்னகை பூக்கிறார் சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான சசிகலா.

சன், ஜீ தமிழ், கலைஞர் டிவி எனப் பயணித்து வரும் சசிகலா, மலேசியாவின் எஸ்ட்ரோ வானவில் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘ரஜினியுடன் நான்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். அவர் காமதேனுவுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்குள்ள நம்ம ஊர் சீனியர் நடிகைங்க எப்படி வந்தாங்க?

x