நா.இரமேஷ்குமார்
சாதுவாய் வலம் வந்த சின்னத்தம்பி யானை, கரும்புக் காட்டை துவம்சம் செய்தது போல் ‘90 எம்.எல். படத்தின் சிங்கிள் ட்ரெய்லரில் மொத்த ஆர்மியையும் தெறிக்க விட்டிருக்கிறார் ஓவியா. கூடுதல் விவரங்களை ஊருக்குச் சொல்லும் ஆவலுடன் படத்தின் இயக்குநர் அனிதா உதீப்பைச் சந்தித்தேன்.
ட்ரெய்லர் வெளியிட்டதுக்கே இவ்வளவு சர்ச்சைகள். மொத்தப் படமும் எப்படியிருக்கும்?
90 எம்.எல் எப்படியிருக்கும்..? மொத்தப் படமும் அந்த மாதிரி இருக்கும் (சிரிக்கிறார்). மொத்தமே ரெண்டு நிமிஷம்கூட இல்லீங்க அந்த ட்ரெய்லர். அதுக்குள்ள படத்தைப் பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் கிளம்புவதை என்னன்னு சொல்றது. இது அந்த மாதிரியான படம் இல்லை. படம் பார்த்ததுக்கு அப்புறமா, படம் நல்லாயிருக்குன்னு எல்லாரும் சொல்வாங்க.