‘செம்பருத்தி’ தொடர் கிளைமாக்ஸ் வந்தாச்சா?


‘‘என்னைக்குத்தான் இந்த ஆதிக்கும், பார்வதிக்கும் திருமணம் நடக்கும். இந்த பார்வதி விஷயத்துல ஆதியோட அம்மா அகிலாண்டேஸ்வரி மனசு மாறவே மாட்டாங்களா?’’ இந்தக் கேள்விகளுக்கு இந்த வார ‘செம்பருத்தி’ தொடர் அத்தியாயங்கள் விடையளிக்கின்றன.

ஜீ தமிழ் சேனல் வழியே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘செம்பருத்தி’ தொடர் இந்த ஞாயிறுக்கிழமை இரண்டரை மணி நேர டெலி ஃபிலிமாக ஒளிபரப்பாகிறது. இதனை ஒட்டி கடந்த சில வாரங்களாக ஆதியும் (கார்த்திக்), பார்வதியும் (ஷபானா) ‘‘இந்த வாரம் நடக்கிற எங்களோட திருமண வைபவத்தை எல்லோரும் அவசியம் பார்க்கணும்” என ப்ரோமோ விளம்பரம் வழியே கடந்த வாரம் முழுக்க அழைப்பிதழ் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இனி அடுத்தகட்டம்?

இப்படியான பரபரப்புக்கு இடையே நகரும் சீரீயலின் பின்னணியாக இனி ‘செம்பருத்தி’ தொடர் கிளைமாக்ஸுக்கு வந்துவிடுமோ என்ற சந்தேகமும் சீரியல் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆனால் சேனல் தரப்போ, ‘‘நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறும் இந்தத் தொடரை எப்படி அதுக்குள்ள முடிப்போம். ரசிகர்கள் இன்னும் பல மாதங்களுக்கு என்னென்னவோ திருப்பங்களை பார்க்கப் போகிறார்கள்!’’ என்றவர்கள், அடுத்தடுத்த சில வாரங்கள் எப்படி நகரும் என்கிற சஸ்பென்ஸையும் கோடிட்டார்கள்.

x