இயக்குநர் பாலாவுக்கு என்னதான் ஆச்சு?- ‘வர்மா’ எழுப்பும் அதிர்வலைகள்!


இர.அகிலன்

முழுவதுமாய் எடுத்து முடிக்கப்பட்டு ரிலீஸுக்குத் தயாராய் இருந்த ஒரு படத்தை தரமில்லை என்று சொல்லி தயாரிப்பாளர் ஒதுக்கித்தள்ளிய கசப்பான அனுபவம் தமிழ்த்திரை வரலாற்றில் சாமானிய இயக்குநருக்குக் கூட நிகழ்ந்திருக்காது. பிரபல இயக்குநர் பாலா அந்த அனுபவத்தைச் சந்தித்திருக்கிறார்!

தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, வசூலில் சாதனை படைத்த திரைப்படம் `அர்ஜூன் ரெட்டி'. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்த இந்தப் படம் தெலுங்கை தாண்டியும் தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்து பரபரப்பைக் கிளப்பியது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருந்தவர் கேரள தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா. இவரும் நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், விக்ரமின் மகன் துருவ்வை இந்தப் படத்தின் ரீ மேக் மூலம் நடிகராக அறிமுகப்படுத்த தீர்மானித்தனர்.

‘சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கு பெரிய அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த இயக்குநர் பாலாவிற்கு நன்றிக்கடனாகவும், அவரது படத்தில் அறிமுகம் கிடைத்தால், துருவ்வின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் ‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கான ‘வர்மா’வை பாலாவை இயக்கும்படி கேட்டுக்கொண்டார் விக்ரம்.

x