பேங்காக் கிளம்பி போயிருக்கிறார் சிம்பு. யெஸ்... ஒரு மாதம் அங்கு தங்கியிருந்து, உடல் எடையைக் குறைத்து பழைய ஸ்லிம் சிம்புவாகத் திரும்பும் திட்டமாம். அங்கிருந்தே ‘மாநாடு’ படத்துக்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கலையையும் கற்று வருகிறார்.
பேங்காக் போனா உடம்பு குறையுமா, அதெப்படி?!
ஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தில் ஓவியா, நடிகை ஓவியாவாகவே வந்து ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார். அந்தப் பாடலில், பிக்பாஸ் வீட்டில் ஓவியா பேசி பிரபலமான ‘ஷட்டப் பண்ணுங்க’, ‘ஸ்ப்ரே அடிச்சிடுவேன்’, ‘கொக்கு நெட்ட கொக்கு’ ஆகிய வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.
மருத்துவக் காதலுக்கு மரியாதை..!