’சத்யா’ வுக்காக ஓடி வந்தேன்- விஷ்ணு ரிட்டர்ன்ஸ்!


மஹா

விஜய் டிவி-யின் ‘ஆபீஸ்’ சீரியல் வழியே தனித்த அடையாளம் பதித்த விஷ்ணு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீ தமிழ் சேனலில் ‘சத்யா’ சீரியலின் ஹீரோவாக மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.

ஏன் இவ்வளவு நீண்ட இடைவெளி?

சின்னத்திரையில் ‘ஆபீஸ்’ சீரியல் தந்த அடையாளத்துல ‘இவன் யாரென்று தெரிகிறதா’, ‘களரி’, ‘கொரில்லா’, ‘சிவப்பு சேவல்’னு வரிசையாக படங்கள்ல நடிக்கிற வாய்ப்புகள் அமைஞ்சுது. அந்தப் பக்கமும் தடம் பதிக்கணும்னு கடந்த மூணு வருசமா சினிமாவுல கவனம் செலுத்திட்டு இருந்தேன். ஆனாலும், ‘சத்யா’ மாதிரி ஒரு நல்ல ப்ராஜெக்ட்டை மிஸ் பண்ண மனசு வரல. அதனால மறுபடியும் சின்னத்திரைக்கு ஓடி வந்துட்டேன்.

x