வந்தா ராஜாவாதான் வருவேன் - திரை விமர்சனம்


தாத்தா கேட்டுக்கொண்டதற்காக, பிரிந்து போன அத்தையை மீண்டும் குடும்பத்துடன் சேர்க்கும் மருமகனின் கதையே ‘வந்தா ராஜாவாதான் வருவேன்'.

மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார் நாசர். அவரின் அன்பு மகள் ரம்யா கிருஷ்ணன் அப்பாவுக்குத் தெரியாமல் பிரபுவைத் திருமணம் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ளாத நாசர், வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அந்தக் காயத்தால் பிறந்த வீட்டை மறந்து புகுந்த வீட்டைத் தன் குடும்பமாகப் பார்க்கிறார் ரம்யா. 20 வருடங்களுக்குப் பிறகு தாத்தாவின் தவிப்பை உணர்ந்த பேரன், அத்தையைக் குடும்பத்துடன் சேர்த்துவைக்கிறார்.

‘அத்தாரண்டிகி தாரேதி' தெலுங்குப் படத்தை சற்றே மாற்றி ரீமேக் செய்திருக்கிறார் சுந்தர்.சி. அவரின் டிரேட் மார்க் காமெடி என்று படத்தில் இல்லாதது பெருங்குறை.

சிம்பு, ரொம்ப மெச்சூர்டான நடிப்பு. ஆக்‌ஷன், காமெடி காட்சியிலும் கலக்கியிருக்கிறார். தன்னைத்தானே கலாய்க்கும் காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. ‘வெயிட்' சிம்பு கொஞ்சம் ஸ்லிம் ஆவது நல்லது.

x