நண்பர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை- நண்பனின் சினிமா கனவை ஜெயிக்கவைத்த கல்லூரித் தோழர்கள்! நா.இரமேஷ்குமார்


“நண்பர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை சார் என்னுடையது. சின்ன வயசிலருந்தே சினிமா தான் கனவா இருந்துச்சு. என் கனவுகளை இத்தனை வருஷமா அடை காத்து வெச்சிருந்தேன். இப்போ என் நண்பர்களால் நேரம் கை கூடியிருக்கு. ‘பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென’ ன்னு ‘நெடுநல்வாடை’யில் வருமே அப்படி என் மனசும் வாழ்க்கையும் குளிர்கிற மாதிரியா புது மழையைத் தருகிற மேகமா என்னையும், என் கனவுகளையும் நண்பர்கள் அரவணைச்சுக்கிட்டாங்க” உணர்ச்சிப்பெருக்கில் விழியோர நீரை கண்களுக்குள்ளேயே தேக்கிப் பேச ஆரம்பிக்கிறார் ‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநர் செல்வகண்ணன்.

“திருநெல்வேலியில் தெற்கு அச்சம்பட்டி தான் சார் என்னோட சொந்த ஊரு. சங்கர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் 2000-ல் முடிச்சேன். என் கூட படிச்ச நண்பர்கள் எல்லோருமே வெவ்வேறு ஊர், நாடுன்னு துறை சார்ந்த வேலையில் சேர்ந்துட்டாங்க. பாலிடெக்னிக் படிச்சாலும் அதுக்கான வேலையைத் தேடாமல், மனசுக்குள் தவிச்சுக்கிட்டிருந்த சினிமா கனவுல நான் சென்னைக்கு வந்துட்டேன். வருஷங்கள் கடக்கும்போதெல்லாம் நண்பர்களைப் பார்க்கும்

போது, ‘என்னடா மாப்ள உன் சினிமா எப்படியிருக்குன்னு’ன்னு அக்கறையா விசாரிப்பாங்க. அவங்களோட வேலைகளையும், வெளிநாடுகளின் அனுபவங்களையும் பகிர்ந்துப்போம்.

x