பகுத்தறிவை மீறி நின்ற பக்தி எழுத்து!


திரைபாரதி
readers@kamadenu.in


திராவிட இயக்க எழுத்தாளர்கள் திரைத்துறையில் புகுந்து, தங்களது குத்தீட்டி வசனங்களால் தீவிரப் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தொடங்கியிருந்த அறுபதுகளின் நடுப்பகுதி அது. அவற்றுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பால் பக்திப் படங்களின் காலம் முடிந்துவிட்டது என எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில், ஆத்தீகக் கருத்துகளை திருநீறாக அள்ளிப் பூசிக்கொண்டு, சிலிர்க்க வைக்கும் செந்தமிழ் நடையில் கம்பீரமான பக்திப் படங்களுக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார் ஒருவர். நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பல தளங்களிலும் முத்திரை பதித்த அவர், ஏ.பி.என் என்று அழைக்கப்பட்ட அக்கம்மாபேட்டை பரமசிவன் நடராஜன். நாடக மேடையிலிருந்து தமிழ்த் திரை கண்டெடுத்துக்கொண்ட எழுத்து வித்தகர்!

x