சினிமா விமர்சனம்: சார்லி சாப்ளின் 2


காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

மேட்ரிமோனி நிறுவனம் நடத்தும் திருவுக்கும் (பிரபுதேவா), மருத்துவர் ராமகிருஷ்ணனின் (பிரபு) மகள் சாராவுக்கும் (நிக்கி கல்ராணி) பார்த்ததும் காதல் மலர்கிறது. திருமணமும் நிச்சயமாகிறது. பேச்சுலர் பார்ட்டியில் தவறான தகவலை நம்பி, காதலியின் கடந்த கால வாழ்க்கை பற்றி சந்தேகப்படும் பிரபுதேவா, நண்பர்களின் தூண்டுதலால் அவரையும், குடும்பத்தையும் அசிங்க அசிங்கமாகப் பேசி வாட்ஸ் - அப் வீடியோ அனுப்புகிறார். பிறகு, கேள்விப்பட்ட தகவலே தவறு என்பதை உணர்ந்து, அது ‘டபுள் டிக்’ ஆகும் முன்பு காதலியின் கைப்பேசியை கைப்பற்றி, அழிப்பதற்காக ஆடுகிற காமெடி ஆட்டமே சார்லி சாப்ளின் 2.

சண்டை, ஆட்டம், காமெடி என இறங்கி ஆடுகிறார் பிரபுதேவா. குளோசப் காட்சிகளிலும் கூட அதே அழகோடு தெரிகிறார். ஆனால், எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடினாலும், படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தக் காட்சியும் இல்லை. நாயகி நிக்கி கல்ராணி அழகாக இருக்கிறார். பிரபுதேவாவுக்கு ஈடுகொடுத்து நடனமாடியிருக்கிறார். வேறு என்ன சொல்வது?

இன்னொரு நாயகியாக அதா சர்மா கிறங்கடிக்கிறார். இளமையும், குளுமையுமாக வருகிற அதா சர்மாவுக்கு நடிப்பும் நன்றாக வருகிறது. ஒரு ரவுண்ட் வருவார்.

x