ரஜினியும் கமலும் கேவலப்படப் போறாங்க...- இயக்குநர் வேலுபிரபாகரன் அதிரடி!


நா.இரமேஷ்குமார்

“ரஜினி, கமலைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. மிக மிக சொற்பமான ஓட்டுகள் வாங்கி, தமிழக மக்களிடம் அவங்க ரொம்பக் கேவலப்படப் போறாங்க’’ தனது வெண்தாடியைத் தடவியபடியே அதிரடியாய் ஆரம்பிக்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன். கடவுள், காதல், காமம், சினிமா, அரசியல் என்று சென்னையின் பின்பனி குளிரையும் தாண்டி கதகதப்பைக் கூட்டுகிறது அவருடனான பேச்சு.

காதல் சீசன், தங்கச்சி சென்டிமென்ட் சீசன், பேய் பட சீசன் மாதிரி தமிழ் சினிமாவில் இது ஸீக்வெல் சீசன் போல. இருபது வருடங்களுக்கு முன் ‘கடவுள்’ படத்தை இயக்கினார் வேலுபிரபாகரன். மாபெரும் வெற்றியைத் தந்த அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை, இளையராஜா இசையில்... கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி நடித்தும் வருகிறார் வேலுபிரபாகரன்.

‘கடவுள் 2’ பற்றிச் சொல்லுங்களேன்?

x