பெஸ்ட் குடுத்தா நெக்ஸ்ட் கிடைக்கும்!- ‘அழகு’ ஸ்ருதி நேர்காணல்


சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அழகு’ தொடர் வழியே கவனத்தை ஈர்த்து வரும் ஸ்ருதியிடம் “ஒரு பேட்டி?” என்று பேப்பர், பேனாவுடன் சென்றால் “அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்தது நல்லது. வீட்டுக்கு ஒரு மரம் அவசியம்” எனச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஞ்ஞானியைப் போல அர்த்தமுடன் பேசுகிறார். மணிக்கணக்காய் நீண்ட அந்த உரையாடலின் சில மணித்துளிகள் மட்டும் இங்கே.

‘அழகு’ மாதிரி பிரைம் டைம் சீரியல் என்றால் சேனல் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி கவனம் பெற முடிகிறதே?

லைஃப்ல எல்லா விஷயமும் பாசிட்டிவா இருக்கணும்னா நமக்கு அமையும் அல்லது அமைச்சிருக்கிற வேலையைச் சரியா செய்யணும். எப்பவும் ஒரே இடத்துல தேங்கிடக்கூடாதுன்னு நினைப்பேன். என்னோட பயணமும் அப்படித்தான். செய்யுறத பெஸ்ட்டா செஞ்சுட்டா அது எந்த நேரமாக இருந்தாலும் கண்டிப்பா நமக்கு ஒரு அடையாளம் கொடுக்கும். அடுத்தடுத்த வாய்ப்புகளும் அதுவா கிடைக்கும். ‘அழகு’ தொடர் வழியே நிறைய பாசிட்டிவ் அன்பு கிடைக்கிறது; மகிழ்ச்சி.

சமீபத்தில் ஆதித்யா சேனலில் ஒரு காமெடி நிகழ்ச்சியிலும் முகம் காட்டினீர்களே?

x