இதெல்லாம், அரசியல்ல சாதாரணமப்பா...


ஏகப்பட்ட பஞ்சாயத்துக்குப் பிறகு ஷூட்டிங் தொடங்கிய சூர்யா - செல்வராகவன் படம் மறுபடியும் பஞ்சாயத்தில் நிற்கிறது. கொடுத்த கால்ஷீட் முழுவதையும் வீணடித்துவிட்டதால், ஏற்கெனவே செல்வராகவனோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிக் கொள்வதிலை சூர்யா. இந்த நிலையில், இன்னும் இருபது நாள் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம் செல்வா.
விடுங்க சார், அதான் ஜோதிகா நிறைய படம் நடிக்கிறாங்கள்ல...

முதல் கணவர் அஸ்வினிடமிருந்து முறைப்படி விவாகரத்துப் பெற்ற ரஜினி மகள் சவுந்தர்யா, தனது மகன் வேதுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் நடித்த விசாகனை அடுத்த மாதம் கரம்பிடிக்கும் சவுந்தர்யா, தனது திருமண பத்திரிகையை திருப்பதி ஏழுமலையானின் திருவடியில் வைத்து பூஜை செய்துள்ளார். தை பிறந்ததும், தலைவர் வீட்டு கல்யாண வேலைகள் பரபரக்குமாம்.
போரைத் தள்ளிப்போட புதுக் காரணம் கிடைச்சிருச்சா தலைவா?

புத்தாண்டுக்கு கோடம்பாக்க நண்பர்கள் எல்லோருக்கும் பார்ட்டி கொடுத்து அசத்தியிருக்கிறார் ‘பேட்ட’ இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். பார்ட்டியில் ‘விஸ்வாசம்’ ட்ரெய்லரைக் குறிப்பிட்டு, “என்ன இருந்தாலும் தலைவர் படத்துக் கெதிரா இப்படியெல்லாமா ட்ரெய்லர் ரிலீஸ் பண்ணுவாங்க?” என்று கண் கலங்கிச் சொன்னாராம். “ஆரம்பிச்சு வெச்சதே நீ தானேப்பா?”ன்னு நண்பர்கள் எதிர்கேள்வி கேட்க, சலசலப்பில் முடிந்திருக்கிறது நியூ இயர் பார்ட்டி!
படமும் வந்துருச்சு... அடுத்த பார்ட்டியில என்ன சொல்லி சண்டை போடப்போறாங்களோ..?

சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்ட விவகாரத்தில், வேண்டாத தயாரிப்பாளர்களுக்கு மட்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் விஷால். வேடிக்கை என்னவென்றால், பூட்டு விஷயத்தில் எல்லோரையும் ஒருங்கிணைத்த இயக்குநர் பாரதிராஜாவுக்கும், ‘விஸ்வாசம்’ தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்கும் நோட்டீஸ் அனுப்பவில்லை. விஷாலின் தைரியத்தை எதிர்தரப்பு தயாரிப்பாளர்கள் நமுட்டு சிரிப்போடு கிண்டல் செய்கிறார்கள்.
இதெல்லாம், ‘அரசியல்’ல சாதாரணமப்பா...

x