கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘திருமணம்’ தொடரில் நாயகன், நாயகிக்கு இணையாக அவர்களது உடன்பிறப்புகள் நவீன், அனிதா கதாபாத்திரமும் பேசப்படுகிறது. அதிலும் அனிதாவாக வரும் ப்ரீத்தியின் துறுதுறு செயல்களைப் பார்த்தால் கண்கள் இமைக்க மறந்துவிடுகின்றன. பிஸியாகவே இருக்கும் ப்ரீத்தியிடம் பேட்டிக்கு டைம் கேட்டேன். “இதுக்கெல்லாம் நேரம் காலம் எதுக்கு... இப்பயே பேசலாமே” என்று உடனே ரெடியாகிவிட்டார்.
டப்ஸ்மாஸ் வழியே கலக்குவது போதாதுன்னு சீரியலிலும் அசத்தத் தொடங்கிட்டீங்க போல..?
ஏதோ விளையாட்டாத்தான் டப்ஸ்மாஸ் பக்கம் போனேன். ஆனா, இன்னைக்கு இவ்ளோ ஃபாலோயர்ஸ் பின் தொடர்வாங்கன்னு நினைச்சே பார்க்கல. இதுதான் என்னோட முதல் சீரியல். இதுக்கு முன்னே, லெவன்த் படிக்கும்போது ‘கலக்கப்போவது யாரு?’ குழுவுடன் சேர்ந்து ஒரு டெலி ஃபிலிம்ல நடிச்சேன்; அவ்ளோதான். இப்போ கிடைக்கிற பாராட்டுகள், வரவேற்பு எல்லாத்தையும் ரொம்பச் சமத்தா தக்க வெச்சுக்கணும்.
சீரியலில் நாயகிக்கு இணையாக செகண்ட் லீட் கதாபாத்திரம் வழியே கொண்டாடப்படுவது எப்படி இருக்கிறது?