ஒருவேளை இது ‘அதுவா’ இருக்குமோ?!


சமர்த்துப் பொண்ணாக இருந்த ரெஜினா, தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பாய் ஃப்ரெண்ட்டை அடிக்கடி வரவழைக்கிறார் என்கிறார்கள் யூனிட் ஆட்கள். ஆண் நண்பரின் ஆலோசனை கேட்டே, ஷூட்டிங் ஸ்பாட்டில் எதையும் செய்கிறாராம்.

ஒருவேளை இது ‘அதுவா’ இருக்குமோ?!

ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு, ஜெயலலிதா பாடிய முதல் பாடலின் வரிகளான ‘அம்மா என்றால் அன்பு’ என்கிற தலைப்பு பரிசீலனையில் இருக்கிறது. எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும், ஜெயலலிதாவாக வித்யாபாலனும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

அப்ப, சின்னம்மா வேஷம் போடுறது யாருங்க?!

x