தயாரிப்பாளர் ஆனா என்ன தப்பு?


மஹா

‘‘சின்னத்திரையில் ஓட ஆரம்பித்து 20 வருஷம் முடிஞ்சாச்சு. இப்பவரைக்கும் யாருக்கும் போர் அடிக்காம போய்க்
கிட்டிருக்கோம். இதுவே ஒரு பெரிய சாதனைதான். இது மனசுக்கு ஒரு பெரிய நிறைவை கொடுத்திருக்கு. அதே மாதிரி உங்களோட இந்தப் பேட்டியும் ஃபுல் மீல்ஸ் கணக்கா நிறைவைக் கொடுக்கணும்?’’ - என்னை முந்திக்கொண்டு எப்போதும் போல கலகலப்பாக பேட்டியைத் தொடங்கி வைக்கிறார், நடிகரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான தீபக்.

ஜீ தமிழ் சேனலுக்காக சினேகா, லைலா கூட்டணியோடு ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் – ஜூனியர்ஸ்’ நிகழ்ச்சியில் பரபரப்பாகிவிட்டீர்களே?

மனசுக்குப் பிடிச்சத செய்யுறதுதான் சந்தோஷம். தொடர்ந்து அந்த மாதிரி வாய்ப்புகள் அமையுறதும் பாக்கியம். ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியிலயே செம பாராட்டுகளை அள்ளினோம். அடுத்து இப்போ சின்னப் பசங்களை இணைத்துக்கொண்டு ஆட்டத்தைத் தொடங்கியிருக்கோம். திறமை, அறிவு, எனர்ஜி எல்லாமும் கேணி மாதிரி ஊறுற பசங்களோட சேர்ந்து ஆட்டம், பாட்டம்னு ஒரு நிகழ்ச்சி. ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

x