நா.இரமேஷ்குமார்
rameshkumar.n@thehindutamil.co.in
சென்னையின் மழைக்கு கதகதப்பைக் கூட்டியபடி ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார் ஆஷ்னா சவேரி. அத்தனை கிளாமராய் வந்திருந்த ஆஷ்னா சவேரியிடம் காமதேனு இதழுக்காகப் பேசினேன்.
சினிமா வாய்ப்பு குறையுதுன்னு கிளாமர் ரூட்டா..?
ஹலோ... ‘நாகேஷ் திரையரங்கம்’ ரிலீஸா கியிருக்கு. பிப்ரவரியில ‘டைட்டானிக்’ ரிலீஸாகப் போகுது. தெலுங்குல ஒரு படம் நடிச்சிக் கிட்டிருக்கேன். முதல் படத்திலிருந்தே நான் இப்படித்தான் நடிச்சிட்டிருக்கேன். நான் மும்பைல பிறந்து வளர்ந்த பொண்ணு. இந்த காஸ்ட்யூம்ஸ் எல்லாம் மாடலிங்ல இருக்கிறவங்க அங்கே தினந்தோறும் சாதாரணமா பயன்படுத்தறது தான். இந்தப் படத்தோட இயக்குநர் கதையைச் சொல்லும்போதே கிளாமர் போர்ஷனையும் சேர்த்து தான் சொன்னார். தவிர, இது அடல்ட் காமெடி படம். கிளாமரும், ஹியூமரும் சரிபாதியா மிக்ஸாகி இருக்கும். எனக் கேற்ற மாதிரியான கிளாமரைத்தான் எல்லை மீறாத அளவிற்கு படத்துல செய்திருக்கேன். அதுல நிச்சயமா ஆபாசம் தெரியாது.
இந்தப் படத்துல வேற என்ன விசேஷம்?
தெலுங்குல ஹிட்டடிச்ச ‘குண்டூர் டாக்கீஸ்’ படத்தோட ரீமேக் படம் இது. அந்த படத்தைப் பார்த்த பிறகுதான் கமிட் பண்ணேன். அவ்வளவு காமெடியா இருக்குமே தவிர ஆபாசம் படத்துல துளியும் இல்லை. நான் இதுவரைக்கும் சிட்டியில இருக்கிற பொண்ணாத் தான் நடிச்சிருக்கேன். முதல் முறையா இந்தப் படத்துல கிராமத்துப் பொண்ணா வர்றேன். அதுக்காக என்னோட லுக் எல்லாத்தையும் மாற்றியிருக்கேன். பாடல் காட்சிகள்ல மட்டும்தான் மாடர்ன் டிரெஸ். அதுவும் கனவு பாட்டுதான். லண்டன், சென்னை, தென்காசி, குற்றாலத்துல எல்லாம் ஷூட்டிங் எடுத்தாங்க. ஒரு நாளைக்கு மூணு, நாலு ஷாட்ஸ் எல்லாம் எடுத்து படத்தை ரொம்ப சீக்கிரமா முடிச்சிட்டார் இயக்குநர்.
படத்துல நிறைய ஹீரோயின்ஸ் இருக்காங்களே?
நிறைய பொண்ணுங்க இருக்காங்கன்னு சொல்லுங்க. ஹீரோயின் நான் மட்டும்தான். சேல்ஸ்மேனா வேலை பார்க்கிற ஹீரோ, சின்னச் சின்ன தப்புகளைப் பண்ணிக்கிட்டிருப்பார். ஒரு பெரிய பிரச்சினையில மாட்டிக்கிட்டுத் தவிக்கிற அவரு போற எடங்களுக்கு எல்லாம் நானும் கூடவே டிராவல் பண்ணுவேன். படம் முழுக்கவே எங்களோட காம்பினேஷன் இருக்கும். அப்போ நான்தானே ஹீரோயின்? (அது சரி!)
நீங்க நடிச்ச டைட்டானிக் படம்?
அந்தப் படத்துல ஐ.டி-யில வேலை பார்க்கிற பெண்ணா நடிச்சிருக்கேன். காதல் வயப்படுகிற ஒரு பெண், எப்படி தனது காதலில் ஜெயிக்கிறாள் என்பது தான் கதை.