மீண்டும்... அழியாத கோலங்கள் - பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம்!


இர. அகிலன்

‘மீரா’ படத்தில் கதாசிரியராக அறிமுகமான எம்.ஆர்.பாரதி, பாலுமகேந்திராவின் அபிமானிகளான அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரி ராவ், நாசர், பிரகாஷ்ராஜ் ஆகியோரை ஒன்றுசேர்த்து மீண்டும் ஒரு ‘அழியாத கோலங்கள்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

பட ஷூட்டிங் முடிந்து, ரிலீஸ் வேலைகளில் மும்முரமாய் இருந்த இயக்குநர் எம்.ஆர்.பாரதியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினேன்.

“இயக்குநர் கே.ரங்கராஜின் ‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்தில் உதவி இயக்குநராக எனது கலைப்பயணத்தை ஆரம்பிச்சேன். அப்போ பத்திரிகையில இருந்த சுதாங்கன் சார், நடிகர் மோகன்கிட்ட, கன்னடத்துல ஒரு வரி எழுதி வாங்கித் தரச் சொன்னார். வாங்கிக் கொடுத்ததும், ‘நீ பத்திரிகைகளுக்கு எழுதலாமே’ன்னு சொல்லி வழிகாட்டினார். சினிமா, வருமானத்துக்கு சரிபட்டு வராததால, அப்போ எல்லா பத்திரிகைகளுக்கும் எழுதிக்கிட்டு இருந்தேன். வெறும் உதவி இயக்குநரா மட்டும் இருந்திருந்தேன்னா, அப்பவே சென்னையை விட்டுட்டு ஊருக்குக் கிளம்பியிருப்பேன். அப்போ என் வாழ்க்கைக்குப் பெரிய ஆதாரமா இருந்தது பத்திரிகைகள்ல இருந்து வந்த வருமானம்தான். பத்திரிகைதான் எனக்கு நல்ல திரையுலக நண்பர்களையும் கொடுத்துச்சு.

x