சினி பிட்ஸ்


நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர் என்பது தெரிந்திருக்கும். பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சத்துணவுத் திட்டத்தில் ராகியுடன் பாலும் கொடுக்கலாமே எனத் தமிழக முதல்வருக்கு ஆலோசனைக் கடிதம் எழுதிய இவர், அதுபற்றி கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் விளக்கமும் அளித்திருக்கிறார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர், திட்டத்துக்கு ஒப்புதலும் அளித்துவிட்டார்.

ஆஹா, இது நம்ம ‘சர்க்கார்’ தானா?

இதுவரை 9 தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் நிவேதா பெத்துராஜ் விருந்தாளிதான். சென்னையில் இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை துபாய்க்கு சென்று அட்டென்டெண்ஸ் போட்டுவிட்டுத் திரும்புகிறார் அவர். காரணத்தைக் கேட்டால், “என் விசா நடைமுறை அப்படி. அப்படி துபாய் போறப்ப ஷாப்பிங் லிஸ்டையும் கூடவே எடுத்துப்பேன்ல” என்கிறார்.

திரைகடல் ஓடும் திரைநாயகிங்க அவரு!

x