ஒரு நட்சத்திரம் உதயமாகிறது!


ந.வினோத் குமார்

ஆஸ்கர், கிராமி… சிறந்த நடிகராகவும், சிறந்த பாடகராகவும் வரத் துடிக்கும் நபர்களின் வாழ்நாள் லட்சியமே இந்த விருதுகளை வெல்வதாகத்தான் இருக்கும். அதற்காக, உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அமெரிக்காவில் கால்பதிக்க நினைக்கும் லட்சியவாதிகளின் எண்ணிக்கை, எண்ணிலடங்காதது.

ஹாலிவுட்டுக்குள்ளும், இசை உலகத்துக்குள்ளும் அவ்வளவு எளிதில் யாராலும் நுழைந்துவிட முடியாது. அப்படியே நுழைந்தாலும், அவ்வளவு எளிதில் வாய்ப்புகள் கிடைத்துவிடாது. அப்படியே கிடைத்தாலும், அவ்வளவு எளிதில் புகழ்பெற்றுவிட முடியாது. அப்படியே புகழ்பெற்றாலும், விருது கிடைப்பது சந்தேகம்தான். இவை அத்தனையும் ஒரே இரவில் சாத்தியம் என்பது திரைப்படத்தில் தவிர நிஜத்தில் நடக்காது.
அப்படியான திரைப்படமே, மூன்று முறை வெவ்வேறு காலகட்டத்தில் ‘ரீமேக்’ ஆனால் எப்படியிருக்கும்? ஒரு கனவு மூன்று பேரின் விழிகளில் தோன்றினால் எப்படியிருக்குமோ, அப்படியான ஒரு கனவு, ‘எ ஸ்டார் இஸ் பார்ன்’ படம்!

உதயமான முதல் நட்சத்திரம்

x