வயிறு சுருங்கிப் போனா கூட மனசு  சுருங்கிப் போகாதுங்க!- அங்கீகாரத்திற்குக் காத்திருக்கும் தொரட்டி


இர.அகிலன்

“கிராமங்கள்ல வயல்களில் ஆட்டுக்கிடை போடுறதைப் பார்த்திருக்கிறோம். நாடோடிகளைப் போல ஆடுகளோட வர்ற மக்கள், விவசாய நிலங்கள்ல கிடை போடுவாங்க. அந்த ஆடுகள் எல்லாம், வயலிலேயே மேய்ந்து வாழும். ஆடுகளோட கழிவுகள்தான் அந்த நிலத்துக்கு உரம். அதுக்கப்புறமா அவங்க, அடுத்த ஊர் நோக்கி நகர்வாங்க. நிஜத்துக்கு அருகில் போய் அவங்களோட வாழ்க்கையைச் சொல்லியிருக்கோம்” என்று தனது ‘தொரட்டி’ படம் பற்றி பேச ஆரம்பிக்கிறார் ‌ஷமன் மித்ரூ.

இந்தப் படத்தின் ஹீரோ கம் தயாரிப்பாளரான ஷமன், சென்னை திரைப்படக்கல்லூரியில் சினிமாட்டோ கிராஃபியில் கோல்டு மெடலிஸ்ட். கே.வி.ஆனந்த், ரவி கேசந்திரன் போன்றோர்களிடம் சினிமா பயின்றவர். ‘தொரட்டி’ பற்றி பேசுவதற்காக ஆழ்வார்பேட்டை ஆண்டவர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு காபி ஷாப்பில் ஷமனைச் சந்தித்தேன்.

“ ‘காடே எங்க வீடாகும் ஆடும் மாடும் உறவாகும் சிந்தும் வேர்வ   எருவாகவே...’ என்று  மடிக்கணினி யில் பாடல் ஒலிக்க, பேட்டி ஆரம்பமாகிறது.
‘தரிசா கிடந்த மனசுக்குள்ள
வெரசா பேஞ்ச மழையப் போல
பந்த பாசம் பாருங்க...
வயிறு சுருங்கி போனா கூட
மனசு சுருங்கி போகாதுங்க பொதுவா
வேரு காஞ்சு போகாத அருகம் புல்லைப் போல

x